செருக்கற்ற சீலர்
Friday, October 5th, 2007நான், சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரான முதலாண்டு, புது தில்லியில் நடந்த கூட்டமொன்றிற்குச்சென்றேன். திரும்புகையில், விமான நிலையத்தில் பெருந்தலைவர் காமராசரைக் கண்டேன். இல்லை, எதோ சிந்தனையில்மூழ்கியிருந்த என்னை அவர் பார்த்துவிட்டார். பெரியவர்கள் சூழ வந்த அவர், என் முன்னே வந்து நின்று
“எப்ப வந்தீங்க?” என்று கேட்டார்.
எழுந்து, வணங்கிவிட்டுப் பதில் கூறினேன். அவர் நகர்ந்தார்.
உரிய நேரத்தில்விமானம் புறப்பட்டது. முதல் வரிசையில் காமராசர் வீற்றிருந்தார். நான், பின்னால எங்கோ உட்கார்ந்திருந்தேன்.
