மக்களுக்கு முதல் மரியாதை செய்யுங்கள்
Wednesday, November 14th, 2007“எனக்கு மாலை கிடைக்குமா, மரியாதை கிடைக்குமா” என்று ஆண்டவன் வாழும் ஆலயத்திறகுச் சென்றால் கூட காத்துக்கிடக்கும் மக்கள் அதிகமாகி விட்டார்கள். அரசியல் பொதுக்கூட்டத்திற்கு வரும் அரசியல் தலைவர்கள் கூட எனக்கு ஆள் உயர மாலை வேண்டும் என்று அதிகாரம் செய்யும்நிலைதான் இன்றும் உள்ளது. மாலை வாங்க காசு கொடுத்து ஆட்களைத் தயார்படுத்தும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். காமராஜர் அரசியல் தலைவர்களில் வித்தியாசமானவர்.