விளம்பரங்கள்: Read tamil magazine rowthiram online

முதியோர் ஓய்வூதிய திட்டம்

10683627_897549106931249_2210287549481804145_o
பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சரான பிறகு கும்பகோணத்துக்கு ஒருமுறை வந்திருந்தார். காமராஜர் காரில் இருந்து இறங்கும் நேரத்தில் ஒரு மூதாட்டி, அவரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி போலீஸ்காரரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.
Continue Reading »

கிங் மேக்கர்

ரஷியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அங்கு காலமானதால் மீண்டும் பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. அந்தநிலையில் பிரதமர் இந்திரா காந்திக்கும், மொரார்ஜிதேசாய்க்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கப் பெரும் முயற்சி எடுத்தார் காமராஜர்.

போட்டியிலிருந்து விலக மொரார்ஜிதேசாய் மறுத்துவிட்டதால் இந்திரா காந்தியைப் பிரதமராக்க, கடுமையாக உழைத்தார். இந்திராகாந்தியைப் பிரதமராக்கிக் காட்டினார்.

இதனால் பெருந்தலைவர் காமராஜரை கிங் மேக்கர் (மன்னர்களை உருவாக்குபவர்) என்றே அழைத்தார்கள்.

நகராட்சித் தலைவர்

விடுதலைப் போரட்டத்தில் தீவிரமாக்க் காமராஜர் ஈடுபட்டார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையி அடைக்கப்பட்டார். அந்த வேளையில் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேரந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருக்கும் போதே நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நகர் மன்றக் கூட்டங்களில் காமராஜர் கலந்து கொள்ளவில்லை. 1942ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் காமராஜ் விடுதலை ஆனார்.

1942 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி நகர் மன்றக்கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர், கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காமராஜர்-

Continue Reading »

பார்புகழ் பெற்ற தலைவர்

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு சேர்ந்த ஆண்டு எது? ஆயிரத்து தொள்ளாயிரத்து அய்ம்பத்தாறாம் ஆண்டு ஆகும்.

கன்னியாகுமரியில், ஏன்கனவே அய்ந்தாம் வகுப்பு வரை கட்டாய இலவசக்கல்விமுறை நடைமுறையில் இருந்தது. பள்ளிகளில் கஞ்சி கொடுக்கும் ஏற்பாடும் இருந்தது. அங்கே பல தொடக்கப் பள்ளிகள், அரசின் நிதி உதவியைப் பெறும் தனியார் பள்ளிகள்.

Continue Reading »

நாகபுரி கொடிப் போராட்டம்

1926 – ம் ஆண்டு நாகபுரிக் கொடி ஏந்திச் செல்லக்கூடாது என்று அரசு தடைபோட்டிருந்தது. அந்தத்டையை மீறுமாறு தொண்டர்களுக்கு காமராஜ் உத்தரவிட்டார்.

தேசமெங்குமிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் – அலை அலையாகப் புறப்பட்டு வந்து நாகபுரிக் கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்புகுந்தனர்.

Continue Reading »

Next »

விளம்பரங்கள்: Buy tamil books online